/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திருமணமான பெண் பலி; போலீஸ் விசாரணை
/
திருமணமான பெண் பலி; போலீஸ் விசாரணை
ADDED : டிச 04, 2024 09:34 AM
கச்சிராயபாளையம் : கச்சிராயபாளையத்தில் திருமாணமான 3 ஆண்டுகளில் பெண் இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம், பிரபாகரன் தெருவைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மனைவி சகாயமேரி, 26; கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. சகாயமேரிக்கு உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டு தனியார் மருத்துவவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 10:00 மணியளவில் மீண்டும் உடல் நிலை பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது உறவினர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சகாயமேரி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
சகாயமேரி தாய் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.