/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நகை செய்யும் ஆசாமி மாயம் போலீஸ் விசாரணை
/
நகை செய்யும் ஆசாமி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஜூலை 18, 2025 04:45 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மனைவியை கோவிலில் விட்டுச் சென்ற கணவர் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி எம்.ஆர்.என்., நகரைச் சேர்ந்தவர் வினோத், 34; நகை செய்யும் ஆசாரி. இவர் கடந்த 15ம் தேதி மனைவி புவனேஸ்வரி, 32; அழைத்து கொண்டு கள்ளக்குறிச்சி சிவன் கோவிலுக்கு சென்றுள்ளார்.
பின், கடையை பூட்டி விட்டு வந்து அழைத்துச் செல்வதாக கூறிச் சென்றவர் வரவில்லை. வீட்டிற்கும் செல்லவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.