/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : ஏப் 19, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தியாகதுருகம், ; தியாகதுருகம் அருகே மாயமான இளம்பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த பானையங்கால் கிராமத்தைச் சேர்ந்த முருகன் மகள் ஆர்த்தி, 20; இவர் பெரம்பலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நர்சிங் படிப்பை முடித்துவிட்டு கடந்த சில தினங்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 8:00 மணிக்கு வீட்டின் பின்புறம் சென்ற ஆர்த்தியை காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து, தியாகதுருகம் போலீஸ் நிலையத்தில், புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

