/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை
/
நர்சிங் மாணவி மாயம் போலீஸ் விசாரணை
ADDED : நவ 03, 2024 04:14 AM
கச்சிராயபாளையம்: கரானுார் கிராமத்தில் காணாமல் போன நர்சிங் மாணவி குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த காரனுார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகள் தனுஸ்ரீ, 20; டிப்ளமோ நர்சிங் முடித்து விட்டு வீட்டில் இருந்து வந்துள்ளார். நேற்று முன்தினம் பிற்பகல் 2:30 மணியளவில் கடைக்கு சென்று வருவதாக கூறிச் சென்ற தனுஸ்ரீ வீடு திரும்பவில்லை.
புகாரின்பேரில், கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
சின்னசேலம்
சின்னசேலம் அடுத்த வி.மாமாந்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணி மகன் சிவக்குமார், 30; டைலர். இவர், நேற்று முன்தினம் காலை கச்சிராயபாளையம் வங்கிக்கு சென்று வருவதாக கூறிச் சென்றவர் வீடு திரும்பவில்லை. புகாரின் பேரில், கீழ்க்குப்பம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.