/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
/
இளம்பெண் மாயம் போலீஸ் விசாரணை
ADDED : பிப் 04, 2024 04:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் சங்கராபுரம் அருகே திருமணமான இளம்பெண் காணாமல் போனது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சங்கராபுரம் அடுத்த பால்ராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி கவுதமி, 25; திருமணமாகி 6 வயதில் பெண் குழந்தை உள்ளது. சென்னையில் வசித்து வந்த நிலையில், கடந்த மாதம் 29ம் தேதி தாய் வீடான நெடுமானுார் கிராமத்தில் நடந்த விசேஷத்திற்கு வந்த கவுதமியைக் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதுகுறித்து கவுதமியின் தாய், சாந்தி அளித்த புகாரின் பேரில், சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.