/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலை
/
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலை
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலை
பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சி மர்ம நபருக்கு போலீஸ் வலை
ADDED : ஆக 09, 2025 11:30 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே பெண்ணிடம் செயின் பறிக்க முயற்சித்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த முடியனுாரை சேர்ந்தவர் ஏழுமலை மனைவி வெண்ணிலா, 38; இவர் கடந்த 7ம் தேதி தனது ஸ்கூட்டரில் கள்ளக்குறிச்சியில் இருந்து வீட்டிற்கு சென்றார்.
நிறைமதி பகுதியில் சென்றபோது, அதே திசையில் பைக்கில் வந்த மர்மநபர் வெண்ணிலா கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றார். வெண்ணிலா செயினை பிடித்து கொண்டு நிலை தடுமாறி கிழே விழுந்தார்.
செயின் பறிக்க முயற்சித்த மர்ம நபர் தப்பிவிட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குபதிந்து செயின் பறிக்க முயன்ற நபரை தேடி வருகின்றனர்.