/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
டீ மாஸ்டருக்கு கத்தி வெட்டு மூவருக்கு போலீஸ் வலை
/
டீ மாஸ்டருக்கு கத்தி வெட்டு மூவருக்கு போலீஸ் வலை
ADDED : பிப் 02, 2025 06:43 AM
தியாகதுருகம்: டீ மாஸ்டரை கத்தியால் வெட்டிய மூவரை போலீசார் தேடிவருகின்றனர்.
தியாகதுருகம் அடுத்த வீரசோழபுரம் புதுக்காலனியை சேர்ந்தவர் முத்தையன் மகன் சித்தரையன்,27; மாடூர் டோல்கேட் அருகே டீக்கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவர், வேறு ஒருவரின் மனைவியை காதலித்து திருமணம் செய்து கொண்டு, வி.பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறார்.
இவர் நேற்று முன்தினம் இரவு வேலையை முடித்துவிட்டு மாடூரில் இருந்து பைக்கில் வீட்டிற்கு சென்றுக் கொண்டிருந்தார்.
வி.பாளையம் அருகே சென்றபோது கே.ஏ.08-9041 பதிவெண் கொண்ட மாருதி சுசூகி காரில் வந்த மூவர், சித்தரையனை வழிமறித்து கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர்.
படுகாயமடைந்த சித்தரையன் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து தியாகதுருகம் போலீசார் வழக்கு பதிந்து, தப்பியோடிய மூவரை தேடிவருகின்றனர்.