/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போதைக்கு எதிராக போலீசார் உறுதிமொழி
/
போதைக்கு எதிராக போலீசார் உறுதிமொழி
ADDED : ஆக 12, 2025 02:41 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி:கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகத்தில் போலீசார் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்றனர்.
கள்ளக்குறிச்சி எஸ்.பி., மாதவன் உத்தரவின்பேரில், ஏடி.எஸ்.பி.,க்கள் சரவணன், திருமால் தலைமையில் போதைப் பழக்கத்திற்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. போலீசார் போதை பழக்கத்தால் ஏற்படும் தீய விளைவுகளை முழுமையாக அறிவேன். நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாகமாட்டேன் உள்ளிட்ட கருத்துக்களுடன் கூடிய உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில், சப்-இன்ஸ்பெக்டர்கள், கான்ஸ்டபிள்கள், போலீஸ் அலுவலக அமைச்சு பணியாளர்கள் கலந்துகொண்டனர்.