/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
சிலை திறப்பு விழாவிற்கு தயாரான தே.மு.தி.க.,வினர் போலீஸ் தடுத்து நிறுத்தம்
/
சிலை திறப்பு விழாவிற்கு தயாரான தே.மு.தி.க.,வினர் போலீஸ் தடுத்து நிறுத்தம்
சிலை திறப்பு விழாவிற்கு தயாரான தே.மு.தி.க.,வினர் போலீஸ் தடுத்து நிறுத்தம்
சிலை திறப்பு விழாவிற்கு தயாரான தே.மு.தி.க.,வினர் போலீஸ் தடுத்து நிறுத்தம்
ADDED : பிப் 13, 2024 06:09 AM

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தலில் விஜயகாந்த் சிலை திறக்க இருந்த நிலையில் போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகளின் பேச்சுவார்த்தையால் நிறுத்தப்பட்டது.
திருக்கோவிலுார் அடுத்த கனகனந்தல் கிராமத்தில் தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர் காமராஜ் தலைமையில், பஸ் நிறுத்தம் அருகே கொடி நாள் விழாவையொட்டி நேற்று கொடியேற்று விழாவிற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
இதற்காக நேற்று முன்தினம் இரவோடு இரவாக அங்கு அமைக்கப்பட்டிருந்த கல்வெட்டுக்கு மேல் விஜயகாந்த் மார்பளவு சிலை நிறுவப்பட்டு நேற்று காலை கொடியேற்றத்துடன் சிலை திறப்பதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்தனர்.
இந்நிலையில் நேற்று தே.மு.தி.க., விழுப்புரம் மாவட்ட செயலாளர் வெங்கடேசன், கள்ளக்குறிச்சி மாவட்ட செயலாளர் கருணாகரன் மற்றும் கட்சியினர் சிலை திறக்க சம்பவ இடத்தில் குவிந்தனர்.
இதனை அறிந்த திருக்கோவிலுார் போலீசார் மற்றும் தாசில்தார் மாரியாப்பிள்ளை, வருவாய் ஆய்வாளர் சதீஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தே.மு.தி.க., வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது, பொது இடத்தில் சிலை நிறுவ வேண்டுமென்றால் முறைப்படி அனுமதி பெற வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடர்ந்து சிலையை அங்கிருந்து எடுத்துச் சென்றனர்.
இதனால், அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.