/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணி மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்
/
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணி மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணி மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்
ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணி மேற்பார்வையாளர்கள் ஆய்வு கூட்டம்
ADDED : நவ 09, 2025 06:31 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணி மேற்பார்வையாளர்களின் கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் நடந்தது.
சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான பணிகள் மற்றும் நோக்கம், முக்கிய செயல்முறைகள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களின் பணி, கணக்கெடுப்புப் படிவம் வழங்கி பெறும் பணி குறித்து ஆலோசனை நடந்தது.
கூட்டத்தில், 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலை https://www.elections.tn.gov.in/ElectoralRolls.aspx என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதேபோன்று 2002ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் மற்றும் உறவினர் பெயர் மூலம் கண்டறிய https://erolls.tn.gov.in/electoralsearch/ என்ற இணையதள முகவரியிலும் கண்டறியலாம் என மாவட்ட தேர்தல் அலுவலரான கலெக்டர் பிரசாந்த் தெரிவித்தார்.
கூட்டத்தில் டி.ஆர்.ஓ., ஜீவா, வாக்காளர் பதிவு அலுவலர்கள், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

