/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
நியூ கே.வி.எம்., ஜூவல்லர்சில் பொங்கல் சிறப்பு சலுகை
/
நியூ கே.வி.எம்., ஜூவல்லர்சில் பொங்கல் சிறப்பு சலுகை
நியூ கே.வி.எம்., ஜூவல்லர்சில் பொங்கல் சிறப்பு சலுகை
நியூ கே.வி.எம்., ஜூவல்லர்சில் பொங்கல் சிறப்பு சலுகை
ADDED : ஜன 16, 2024 06:27 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி நியூ கே.வி.எம்., ஜூவல்லர்சின் 59வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும், பொங்கல் பண்டிகை சலுகையாக 1 பிளஸ் 1 தங்க நகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடையின் உரிமையாளர் வேல்முருகன் கூறியதாவது:
நியூ கே.வி.எம்., ஜூவல்லர்ஸ் 59வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டும், பொங்கல் பண்டிகை சலுகையாகவும் 1 பிளஸ் 1 தங்க நகைத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஜனவரி 1 முதல் 24ம் தேதி வரை வாடிக்கையாளர்கள் வாங்கும் ஒவ்வொரு கிராம் நகைகளின் மதிப்பிற்கேற்ப டிஜிட்டல் தங்க நாணயங்கள் அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
மேலும், நகைகளின் மதிப்பிற்கேற்ப 24 கிராம் தங்க நாணயங்களை வெல்வதற்கான போட்டி கூப்பன்களும் வழங்கப்படுகிறது.
இதற்கு செய்தித்தாளில் வெளியான போட்டி கூப்பனில் உள்ள வினாக்களை பூர்த்தி செய்து போட்டியில் பங்கேற்கலாம். தேர்வு செய்யப்படும் நபருக்கு ஒரு கிராம் தங்க நாணயம் அன்பளிப்பாக வழங்கப்படும்.
வெற்றியாளர்கள் தேர்வு செய்யும் நிகழ்ச்சி எங்களது முகநுால் மற்றும் யூ டியூப் பக்கத்தில் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்படும். வாடிக்கையாளர்களின் நம்பகத் தன்மையுடன் இயங்கும் நியூ கே.வி.எம்., ஜூவல்லர்சில் அனைவரும் விரும்பும் வகையில், அழகுற எண்ணற்ற டிசைன்களில் தங்கம் மற்றும் வைர நகைகள், வெள்ளி பொருட்கள்விற்பனை செய்யப்படுகிறது.
அதிக பலன் தரும் தங்க நகைத் திட்டத்தில், முதல் மாத தவணைத் தொகையை செலுத்தி 2ம் மாத தவணை தொகையை அன்பளிப்பாக பெற்று பயனடையலாம். பொதுமக்கள் தொடர்ந்து ஆதரவு அளிக்க கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு வேல்முருகன் கூறினார்.