/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
/
மாரியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு
ADDED : ஏப் 14, 2025 11:38 PM

ரிஷிவந்தியம், ; எகால் மாரியம்மன் கோவிலில் தமிழ் புத்தாண்டுயொட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.
வாணாபுரம் அடுத்த எகால் கிராமத்தில் பழமை வாய்ந்த மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தமிழ் புத்தாண்டுயொட்டி கிராம மக்கள் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்வது வழக்கம்.
அதன்படி, நேற்று மதியம் 2: மணிக்கு 50க்கும் மேற்பட்ட மக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். அங்கு, மூலவர் மற்றும் உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் செய்யப்பட்டது. தொடர்ந்து, பொதுமக்கள் பொங்கல் வைத்து சுவாமி வழிபாடு செய்தனர். பொதுமக்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
இரவு மாரியம்மன், கெங்கையம்மன் சுவாமி வீதியுலா நடந்தது.