/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை; பொன்முடி எம்.எல்.ஏ., துவக்கி வைப்பு

ADDED : ஜூலை 08, 2025 01:05 AM

திருக்கோவிலுார் : அரகண்டநல்லுார் பேரூராட்சியில் பொன்முடி எம்.எல்.ஏ., வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை பணியில் ஈடுபட்டார்.
ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் மூலம் தி.மு.க., உறுப்பினர் சேர்க்கையை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அரகண்டநல்லுார் பேரூராட்சியில், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் அன்பு தலைமையில் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
பொன்முடி எம்.எல்.ஏ., பங்கேற்று கட்சி நிர்வாகிகளுடன் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கையை துவக்கி, அரசின் சாதனைகளை கூறி, பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் சுந்தரமூர்த்தி, சிறுபான்மை பிரிவு அக்பர், நகர துணை செயலாளர் சீனிவாசன், நகர பொருளாளர் காமராஜ், இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.