/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆபாச வீடியோ வைரல்; முதல்நிலை காவலர் 'சஸ்பெண்ட்'
/
ஆபாச வீடியோ வைரல்; முதல்நிலை காவலர் 'சஸ்பெண்ட்'
ADDED : செப் 16, 2025 11:42 PM
கள்ளக்குறிச்சி; கரியாலுார் போலீஸ் குடியிருப்பு வளாகத்தில் ஆபாசமான முறையில் செயல்பட்ட முதல் நிலை காவலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி அடுத்த மூரார்பாளையத்தை சேர்ந்தவர் யுவராஜ், 32; இவர் கரியாலுார் போலீஸ் நிலைய காவலர் குடியிருப்பில் தங்கி முதல் நிலை காவலராக பணிபுரிந்து வருகிறார். யுவராஜ், காவலர் குடியிருப்பு வளாகத்தில் அரை நிர்வாணத்துடன் ஆபாசமாக பேசி செய்கையில் ஈடுபட்ட வீடியோ வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த வீடியோ கள்ளக்குறிச்சி மாவட்ட போலீசாரை அதிர்ச்சியடைய செய்தது. நேற்று முன்தினம் யுவராஜ் ஆயுதடைப் படைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்று அவரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி., மாதவன் உத்தரவிட்டுள்ளார்.