ADDED : ஆக 31, 2025 04:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இப்பள்ளியில் படிக்கும்போது 1100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மண்டல அளவில் வெற்றி பெற்றேன். தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, ஆசிரியர்கள் சண்முகசுந்தரம், பாண்டுரங்கன், தங்கப்பன், ஆனந்தராஜ், குழந்தைவேல், சீத்தாராமன் வழிகாட்டுதலால் கடந்த 1996 முதல் தற்போது வரை 29 ஆண்டுகளாக பேரூராட்சி, நகராட்சி கவுன்சிலராக உள்ளேன்.
படித்த பள்ளியியிலேயே பெற்றோர் ஆசிரியர் கழக தலைவராக பதவி வகிப்பது பெருமையாக உள்ளது. விளையாட்டை ஊக்குவிக்கும் விதமாக ஆண்டு தோறும் ரூ. 50,000 மதிப்பில் பரிசுகள் வழங்கி வருகிறேன். மாணவர்களின் பொது அறிவை வளர்க்கும் விதமாக கடந்த ஆண்டு தினமலர் பட்டம் இதழ் வாங்கி இலவசமாக வழங்கினேன். பள்ளிக்கு சுற்றுச்சுவர், குடிநீர் வசதி ஏற்படுத்தி கொடுத்துள்ளேன்.
டேனியல்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர்.

