/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட முகாம்
/
அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்ட முகாம்
ADDED : டிச 13, 2024 06:46 AM
கள்ளக்குறிச்சி: விருத்தாசலம் அஞ்சல் கோட்டத்தில் அஞ்சல் ஆயுள் காப்பீடுக்கான சிறப்பு முகாம் நடக்கிறது.
விருத்தாசலம் கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் அப்துல் லத்தீப் செய்திக்குறிப்பு;
விருத்தாசலம் அஞ்சல் கோட்டத்தில் அனைத்து தலைமை, துணை மற்றும் கிளை அலுவலகங்களில் அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம், கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் சேருவதற்கான சிறப்பு முகாம் நேற்று முன்தினம் (11 ம் தேதி) முதல் துவங்கி, 18ம் தேதி வரை நடக்கிறது.
இத்திட்டத்தில் குறைவான பிரீமியம் வசூல் செய்து அதிக போனஸ் வழங்கப்படுகிறது. பிரீமியத் தொகை மற்றும் முதிர்வுத் தொகைக்கு முழுமையான வருமான வரிவிலக்கு உண்டு.
இதில் அரசு ஊழியர்கள், வங்கி ஊழியர்கள், தனியார் பள்ளி ஆசிரியர்கள், நிகர்நிலை பல்கலைக் கழக ஊழியர்கள், அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஊழியர்கள், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்பட்ட நிறுவன ஊழியர்கள் சேரலாம்.
அதேபோல் மருத்துவர்கள், பொறியாளர்கள், மென்பொருள் வல்லுநர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், அனைத்து பட்டபடிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ., முடித்தவர்களும் சேரலாம்.
மேலும் கிராம மக்கள் நலமேம்பாட்டிற்காக பிரத்யேகமாக கிராமிய அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டம் உள்ளது.
இதில் 18 வயது முதல் 55 வயது வரை உள்ளவர்கள் சேரலாம்.
கள்ளக்குறிச்சி, திருக்கோவிலுார் மற்றும் விருத்தாசலம் தலைமை அஞ்சலகங்கள், அனைத்து துணை, கிளை அஞ்சலங்களை அணுகி அஞ்சல் ஆயுள் காப்பீடு திட்டங்களில் இணைந்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.