ADDED : ஆக 21, 2026 04:12 PM
கள்ளக்குறிச்சி: விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 4ம் தேதி தபால் சேவை குறைகேட்பு முகாம் நடக்கிறது.
விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ஜெயசீலன் செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் அஞ்சல் கோட்ட அளவிலான தபால் சேவை குறைகேட்பு முகாம் வரும் செப்டம்பர் மாதம் 4ம் தேதி காலை 11:00 மணியளவில் நடக்கிறது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் அஞ்சல் அலுவலகம் சார்பில் அளிக்கப்படும் சேவைகளில் ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதை கடிதமாக எழுதி விருத்தாசலம் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகம், கே.பி.டி., வளாகம், கடலுார் ரோடு விருத்தாசலம் 606 001 என்ற முகவரிக்கு பதிவுத் தபாலாகவோ, விரைவு அல்லது சாதாரண தபாலாகவோ அனுப்பலாம். புகார் மனு வரும் 31ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
