ADDED : செப் 22, 2024 06:08 AM

கள்ளக்குறிச்சி : விருத்தாசலம் கோட்ட கூட்டு போராட்ட குழுவினர் சார்பில் கள்ளக்குறிச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
அனைத்திந்திய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில பொருளாளர் விஷ்ணு விஜயன் தலைமை தாங்கினார்.
கோட்ட செயலாளர் துரை, அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கத் தலைவர் வெற்றிவேல், செயலாளர்கள் சதீஷ், குமரவேல், பாரதிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தலைவர் ராமதாஸ் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் திருப்பரங்குன்றம் துணை அஞ்சலகத்தில் பணி புரிந்த பெண் தபால்காரர் சுமதி, 30; என்பவர் கடந்த 12ம் தேதி உபகோட்ட அதிகாரி தீபக் ராஜன் பல்வேறு புகார்களை எழுப்பி தன்னை தற்கொலைக்கு துாண்டியதாக கடிதம் எழுதிவைத்து விட்டு, தற்கொலை செய்து கொண்டார்.
உயரதிகாரியின் அதிகார துஷ்பிரயோகத்தில் உயிரிழந்த பெண் ஊழியரின் குடும்பத்துக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும், பெண் ஊழியர் இறப்பிற்கு காரணமான அதிகாரியை உடன் கைது செய்யவேண்டும் என வலியுறத்தப்பட்டது.
கோட்ட உதவி செயலாளர்கள் அய்யப்பன், பாபு, கோட்ட உதவி பொருளாளர் தம்பு ரத்தினம் உட்பட 100க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.