/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் முதுகலை வகுப்பு துவக்க விழா
/
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் முதுகலை வகுப்பு துவக்க விழா
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் முதுகலை வகுப்பு துவக்க விழா
பங்காரம் லஷ்மி கல்லுாரியில் முதுகலை வகுப்பு துவக்க விழா
ADDED : செப் 05, 2025 07:46 AM

கள்ளக்குறிச்சி; பங்காரம் லஷ்மி கல்லுாரியில் முதுகலை முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் துவக்க விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதுகலை முதலாமாண்டு வகுப்புகள் துவக்க விழா நடந்தது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் முன்னிலை வகித்தனர். வணிகவியல் துறை தலைவர் வெங்கடேசன் வரவேற்றார்.
விழாவில் கல்லுாரி முதல்வர் பழனியம்மாள், முதுகலை பட்டபடிப்பின் முக்கியத்துவம் மற்றும் அதன் பயன்கள் குறித்து எடுத்துரைத்தார். இதில் முதுகலை பட்டபடிப்பில் சேர்ந்த மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், கல்லுாரி துறை தலைவர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர். நிகழ்ச்சியை துணை முதல்வர் சக்திவேல் தொகுத்து வழங்கினார். துறை தலைவர் பெரியசாமி நன்றி கூறினார்.