/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் ஒத்திவைப்பு
/
அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் ஒத்திவைப்பு
அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் ஒத்திவைப்பு
அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் ஒத்திவைப்பு
ADDED : பிப் 21, 2024 10:16 PM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்கும் மருத்துவமுகாம் பிப்., மாதம் முழுவதும் நடைபெறாது என மாற்றுத்திறனாளி நல அலுவலர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் அரசு மருத்துவகல்லுாரி மருத்துவமனையில், வாரந்தோறும் வியாழக்கிழமை மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடைபெறும்.
இம்முகாமில் டாக்டர்கள் உரிய பரிசோதனை செய்து, அதில் 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுக்கு மருத்துவசான்றிதழும், தேசிய அடையாள அட்டை வழங்கவும் பரிந்துரை செய்வர். இதையொட்டி, மாவட்டம் முழுவதும் வசிக்கும் மாற்றுத்திறனாளிகள் முகாமில் பங்கேற்க கள்ளக்குறிச்சிக்கு வருவர்.
இந்நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணிகள் நடைபெறுவதால், பிப்ரவரி மாதம் முழுவதும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான மருத்துவ முகாம் நடைபெறாது. தொடர்ந்து, மார்ச் 7ம் தேதியில் இருந்து மருத்துவமுகாம் நடைபெறும்.