/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கல்வராயன்மலை சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
/
கல்வராயன்மலை சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
கல்வராயன்மலை சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
கல்வராயன்மலை சாலையில் பள்ளம்: வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : மே 29, 2025 11:36 PM

கச்சிராயபாளையம்: கல்வராயன்மலையில் புதிதாக அமைக்கப்பட்ட சாலை ஓரத்தில் மண் கொட்டாமல் பள்ளமாக உள்ளதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
கல்வராயன் மலையில் பெரியார், கவியம், மேகம், சிறுகலுார், எட்டியாறு உள்ளிட்ட பல்வேறு நீர் வீழ்ச்சிகள் உள்ளன. மேலும் இங்குள்ள கரியாலுார் சிறுவர் பூங்கா, படகுத்துறை, மூங்கில் குடில்கள், பார்வையாளர்களை வசீகரிக்கின்றன.
இதனை காண தமிழக்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் கல்வராயன் மலைக்கு அதிகளவில் வருகின்றனர்.
இங்கு வருவோர் பெரும்பாலும், கார்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களிலேயே அதிகளவில் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் கல்வராயன் மலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கீழ்பரிகம் முதல் குண்டியாநத்தம் வரை சேதமடைந்த தார் சாலை புதிதாக அமைக்கப்பட்டது.
இந்த சாலையின் ஓரம் மண் கொட்டப்படாமல் உள்ளது. குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் சாலை ஓரத்தில் மண் கொட்டப்பட்டது.
அந்த மண்ணும் சமீபத்தில் பெய்த மழையில் அடித்து செல்லப்பட்டது.
இதனால் தார் சாலை ஓரத்தில், 2 அடிக்கு மேல் பள்ளம் உள்ளது.
இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த அச்சத்துடன் சாலையை கடந்து வருகின்றனர்.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' மலை சாலை மிகவும் குறுகலான சாலை என்பதால் பஸ், லாரி போன்ற வாகனங்கள் வரும் போது சாலை ஒரத்தில் ஒதுங்க முடியவில்லை.
குறிப்பாக பைக்குகளில் செல்வோர் சாலை ஓரத்தில் உள்ள பள்ளத்தால் நிலை தடுமாறி கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி படுகாயமடைந்த சம்பவங்களும், சிலர் உயிரிழந்த சம்பவங்களும் நடந்துள்ளன. இதனால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த அச்சத்துடன் பயணிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
சாலை ஓரத்தில் பள்ளத்தை மண் கொட்டி சீரமைக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.