/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தண்டலை சாலையில் பள்ளம்; கனரக வாகனங்கள் செல்ல தடை
/
தண்டலை சாலையில் பள்ளம்; கனரக வாகனங்கள் செல்ல தடை
ADDED : செப் 16, 2025 11:40 PM

ரிஷிவந்தியம்; தண்டலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதித்து நெடுஞ்சாலைத்துறை அறிவிப்பு பேனர் வைத்துள்ளது.
கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராம பெரிய ஏரிக்கு அருகே சாலையின் நடுவில் திடீரென பள்ளம் ஏற்பட்டது. ஏரியில் இருந்து விளைநிலத்திற்கு தண்ணீர் செல்லும் மதகின் மேல்பகுதியில் இரண்டு இடங்களில் உடைப்பு ஏற்பட்டதால் பள்ளம் உருவானது. இச்சாலை வழியாக கனரக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
பள்ளம் இருப்பதை காண்பிக்க சிகப்பு நிற துணி கட்டி வைத்துள்ளனர். இச்சாலையில் கனரக வாகனங்கள் சென்றால், மதகு மேலும் உடைய வாய்ப்பு உள்ளது. இதனால் சூளாங்குறிச்சி மும்முனை சந்திப்பு பகுதியில், தண்டலை பெரிய ஏரி மதகு பழுதடைந்துள்ளதால் கனரக வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை, மாற்றுப்பாதையில் செல்லுமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது.