/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு
/
பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத்தேர்வு
ADDED : பிப் 13, 2024 06:14 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 109 மையங்களில் பிளஸ் 2 மாணவர்களுக்கு செய்முறைத் தேர்வு நேற்று துவங்கியது.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 125 அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இங்கு பிளஸ்-2 பயிலும் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு 109 மையங்களில் நேற்று காலை துவங்கியது.
இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் உட்பட 10க்கும் மேற்பட்ட பாட பிரிவுகளுக்கு தலா 20 மதிப்பெண்களுக்கு செய்முறைத் தேர்வு நடைபெறுகிறது.
நேற்று நடந்த தேர்வில் மாவட்டம் முழுதும் 55 ஆயிரத்து 29 மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். வரும் 18ம் தேதி வரை செய்முறைத் தேர்வுகள் நடைபெற உள்ளன.