/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
தாகூர் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
/
தாகூர் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
தாகூர் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
தாகூர் ஜீவன் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு
ADDED : மே 10, 2025 12:53 AM

சின்னசேலம்: சின்னசேலம் தாகூர் ஜீவன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பிளஸ் 2 பொது தேர்வில் மாவட்ட அளவில் சாதனை படைத்துள்ளனர்.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய அனைத்து மாணவர்களும் தேர்ச்சி அடைந்து 100 சதவீதம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாணவர் பயாஸ் அஹமத் 588 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடமும், மாணவர் பூமணி ராஜா 584 மதிப்பெண் பெற்று இரண்டாமிடமும் பிடித்தனர்.
சாதனை படைத்த மாணவர்களுக்கு பள்ளி சார்பில் பாராட்டு விழா நடந்தது. பள்ளி தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். செயலாளர் பிரபாகரன், பொருளாளர் விஜயகுமார் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் ராஜி வரவேற்றார்.
நிகழ்ச்சியில், பள்ளி இணைச் செயலாளர் அருண்குமார், கல்விக்குழு உறுப்பினர்கள் முத்துசாமி, சண்முகம், மணிகண்டன், இயக்குநர்கள் செல்வராஜ், பரமசிவம், பழனிவேல், வரதராஜன், ராஜமாணிக்கம், பள்ளி தலைமையாசிரியர் மணிகண்டன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் மாணவர்களுக்கு பரிசு வழங்கி பாராட்டினர்.