/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கள்ளக்குறிச்சியில் உலக நல அமைதிக்காக வேள்வி
/
கள்ளக்குறிச்சியில் உலக நல அமைதிக்காக வேள்வி
ADDED : ஜன 05, 2024 10:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மனவளக்கலை மன்றம் சார்பில் உலக நல அமைதிக்காக வேள்வி நடத்தப்பட்டது.
மனவளக்கலை மன்ற நிர்வாக அறங்காவலர் தங்கவேல் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கற்பகவள்ளி, அருணா ஆகியோர் அருள் வணக்கம், குரு வணக்கம் பாடல்கள் பாடினர்.
மன்ற பேராசிரியர்கள் குணசேகரன், வெங்கட் உலக நல வேள்வியினை நடத்தினர். முன்னாள் எம்.எல்.ஏ., கோமுகி மணியன், அறங்காவலர் பெருமாள் வாழ்த்துரை வழங்கினர். 108 மனவளக்கலை மன்றத்தினர் அமைதி தின வேள்வியில் பங்கேற்றனர். பாஸ்கரன் நன்றி கூறினார்.