sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கள்ளக்குறிச்சி

/

முன் விரோத தகராறு: தந்தை, மகன் கைது

/

முன் விரோத தகராறு: தந்தை, மகன் கைது

முன் விரோத தகராறு: தந்தை, மகன் கைது

முன் விரோத தகராறு: தந்தை, மகன் கைது


ADDED : நவ 03, 2024 11:20 PM

Google News

ADDED : நவ 03, 2024 11:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே முன் விரோத தகராறில் வாலிபர்களைத் தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்தனர்.

சங்கராபுரம் அடுத்த வடசெட்டியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் முத்துபாண்டியன். இவருக்கும் எதிர்வீட்டைச் சேர்ந்த அழகேசன், 50; என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்நிலையில் தீபாவளியன்று பட்டாசு வெடித்தது தொடர்பாக இருவருக்குமிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது.

இதில், அழகேசன் அவரது மகன் ஆனந்தராஜ், 23; சேர்ந்து முத்து பாண்டியன், தங்கதுரை, சூர்யா, துரை, ரமேஷ், ஆனந்த பாபு ஆகியோரை தாக்கினர்.

காயமடைந்த முத்துபாண்டியன் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை சேர்க்கப்பட்டார்.

இது குறித்த புகாரின் பேரில் அழகேசன், 50; அவரது மகன் ஆனந்தராஜ், 23; ஆகியோர் மீது சங்கராபுரம் போலீசார் வழக்குப் பதிந்து இருவரையும் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us