/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
இ-பட்டா வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு
/
இ-பட்டா வழங்கக்கோரி பிரிதிவிமங்கலம் மக்கள் மனு
ADDED : மார் 25, 2025 04:37 AM

கள்ளக்குறிச்சி: அரசு வழங்கிய வீட்டு மனைகளுக்கு இணைய வழி பட்டா வழங்கக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தியாகதுருகம் அடுத்த பிரிதிவிமங்கலம் கிராம பொதுமக்கள் கொடுத்துள்ள மனு;
கடந்த 2011ம் ஆண்டு பிரிதிவிமங்கலத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் சமுதாயத்தை சேர்ந்த 137 பயனாளிகளுக்கு, தமிழக அரசால் தலா 2 சென்ட் பரப்பளவில் வீட்டுமனை வழங்கப்பட்டது. இந்த மனைகளை அளவீடு செய்யக்கோரி கலெக்டர், ஆர்.டி.ஓ., ஆகியோரிடம் மனு கொடுத்தோம். இதை தொடர்ந்து ஐகோர்ட் உத்தரவுப்படி 2024ம் ஆண்டு வருவாய்த்துறையினர் இடத்தை அளவீடு செய்து, ஒப்படைவு வழங்கினர். ஆனால், இதுவரை இணைய வழி பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே, வீட்டு மனைக்கு இ-பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.