ADDED : ஜன 09, 2026 07:36 AM

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டில் தனியார் கல்லுாரி பஸ்கள் மோதிக்கொண்ட விவகாரத்தில் இரு பஸ்களின் டிரைவர்கள் மற்றும் மாணவர்கள் சாலையை மறித்து தகராறில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
திருவண்ணாமலையில் இயங்கி வரும் இரண்டு தனியார் கல்லுாரி பஸ்கள் நேற்று காலை மேல்சிறுவலுாரில் ஒன்றுக்கொன்று மோதிக்கொண்டனர்.இந்த இரண்டு பஸ்களும் மூங்கில்துறைப்பட்டு அண்ணாநகர் தேசிய நெடுஞ்சாலையில் நடுவே நிறுத்தி இரண்டு பஸ் டிரைவர்களும் ஒருவருக்கொருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.பின்பு இரண்டு கல்லுாரி பஸ்சில் இருந்து மாணவர்கள் கீழே இறங்கி சாலையில் நின்றதால் நேற்று காலை 8:00 மணியிலிருந்து 8.30 வரை இப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.
தகவல் அறிந்த மூங்கில்துறைப்பட்டு சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா இருதரப்பினரிடமும் பேசி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
