ADDED : அக் 10, 2024 05:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையம் அருகே தனியார் பள்ளி ஆசிரியை மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் அடுத்த வெங்கட்டாம்பேட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலு மகள் ஆர்த்தி 22, இவர் கச்சிராயபாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் காலை வழக்கம் போல் பள்ளிக்கு சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இதனால் அதிர்ச்சியடைந்த ஆர்த்தியின் குடும்பத்தினர் அவரை நண்பர்கள் மற்றும் உறவினர் வீடு என எங்கு தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்த ஆர்த்தியின் பெற்றோர் அளித்த புகாரில் கச்சிராயபாளையம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.