/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரியலுார் பள்ளியில் வரும் 28ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
/
அரியலுார் பள்ளியில் வரும் 28ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
அரியலுார் பள்ளியில் வரும் 28ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
அரியலுார் பள்ளியில் வரும் 28ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம்
ADDED : செப் 19, 2024 11:52 PM
கள்ளக்குறிச்சி: அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரும் 28 ம் தேதி தனியார் துறை வேலை வாயப்பு முகாம் நடக்கிறது.
இது குறித்து கலெக்டர் பிரசாந்த் விடுத்துள்ள செய்திகுறிப்பு;
கள்ளக்குறிச்சியில் மாவட்ட நிர்வாகம், வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம், நகர்புற மற்றும் ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து வரும் 28ம் தேதி தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் நடத்துகிறது.
பகண்டை கூட்ரோடு அருகே உள்ள அரியலுார் அரசு மேல்நிலைப் பள்ளியில் அன்று காலை 10:00 மணி முதல் மாலை 3:00 மணி வரை நடக்கிறது. முகாமில் தொழில்துறை, சேவைத் துறை, விற்பனைத்துறை சார்ந்த தமிழக அளவிலும், கள்ளக்குறிச்சி மாவட்டம் அருகில் அமைந்துள்ள 100க்கும் மேற்பட்ட பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்கேற்று, பணியாட்களை தேர்வு செய்கின்றனர்.
இதில் டிரைவர் உள்ளிட்ட 8 ம் வகுப்பு, 10ம் வகுப்பு முதல் பட்டபடிப்பு வரை, ஐ.டி.ஐ., டிப்ளமோ, அக்ரி, செவிலியர், ஆசிரியர் தகுதி, ஓட்டல் மேனேஜ்மென்ட், முதுநிலை, மற்றும் பொறியியல் பட்டபடிப்புகள் போன்ற கல்வி தகுதியடைய 18-40 வயதிற்குட்பட்டவர்கள் பங்கேற்று பயனடையலாம்.
விருப்பமுள்ளவர்கள் பயோ- டேட்டா, கல்வி சான்றிதழ்களின் நகல்கள், ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றுடன் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களை 8807204332, 04151-295422 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு அதில் உள்ளது.