/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
/
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
ADDED : ஆக 21, 2025 08:54 PM

மூங்கில்துறைப்பட்டு; மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் பரிசளிப்பு விழா நடந்தது.
மூங்கில்துறைப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் திருவள்ளுவர் அறக்கட்டளை சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா போட்டிகள் நடத்தப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா பள்ளி வளாகத்தில் நடந்தது.
திருவள்ளுவர் அறக்கட்டளை தலைவர் விஜய் ஆனந்த் தலைமை தாங்கினார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் அசோக்குமார், துணை சேர்மன் அஞ்சலை கோவிந்தராஜ், தலைமை ஆசிரியர் செந்தில், ஊராட்சி தலைவர் பரமசிவம் முன்னிலையில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
பள்ளி வளர்ச்சி குழு தலைவி சுமதி, ஊராட்சி உறுப்பினர்கள் சுரேஷ், கணேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.