ADDED : பிப் 09, 2026 03:04 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி சர்வோதயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் அண்ணாதுரை, மாவட்ட கல்வி அலுவலர் விஷ்ணு மூர்த்தி, வடபொன்பரப்பி சப் இன்ஸ்பெக்டர் சலாம் உசேன் முன்னிலை வகித்தனர். பள்ளி தாளாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார்.
பள்ளியில் நடந்த விளையாட்டு, தனித்திறன் போட்டிகள் மற்றும் நடைபெற்ற தேர்வுகளில் முதல் மூன்று இடம் பிடித்த மாணவர்கள், கலை நிகழ்ச்சி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும், ஊக்குவித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது.
பள்ளி தலைமை ஆசிரியர் அண்ணாதுரை நன்றி கூறினார்.

