/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
திறனறி தேர்வு பயிற்சி ஆசிரியர்களுக்கு பரிசு
/
திறனறி தேர்வு பயிற்சி ஆசிரியர்களுக்கு பரிசு
ADDED : ஜூன் 26, 2025 02:33 AM

கள்ளக்குறிச்சி: மாவட்டத்தில், தேசிய வருவாய் வழி திறனறித் தேர்வில் சிறப்பாக பயிற்சி அளித்து மாணவிகளை தேர்ச்சி அடைய செய்த ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
மாவட்டத்தில் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறையின்கீழ் இடைநின்ற மாணவர்களுக்காக கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளி செயல்பட்டு வருகிறது.
இப்பள்ளியில், 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று, 9 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்றால் மாதந்தோறும் 1,000 ரூபாய் ஊக்கத் தொகை வழங்கப்படும். அந்த வகையில் கடந்த, 2024-25ஆம் கல்வி ஆண்டில் கஸ்துாரிபா காந்தி பாலிகா வித்யாலயா பள்ளிகளில் பயின்ற 9 மாணவிகள் தேசிய வருவாய் வழி மற்றும் திறனறித் தேர்வில் தேர்ச்சி பெற்றனர்.
இந்த நிலையில், மாணவிகளுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து தேர்ச்சி அடைய செய்த ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில், கலெக்டர் அலுவலகத்தில் பாராட்டு நிகழ்ச்சி நடந்தது. இதில், 13 ஆசிரியர்களுக்கு அரசு சார்பில், 5 ஆயிரம் ரூபாய் காசோலை மற்றும் சான்றிதழ்களை கலெக்டர் பிரசாந்த் வழங்கி பாராட்டினார். சி.இ.ஓ., கார்த்திகா மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.