ADDED : டிச 30, 2025 07:04 AM
அ நிறம் | அளவு
மூங்கில்துறைப்பட்டு:: புதுச்சேரியில் நடந்த சர்வதேச சிலம்பம் மற்றும் கராத்தே போட்டியில் மூங்கில்துறைப்பட்டு சிலம்பம் வீரர்கள் வெற்றி பெற்றனர்.
புதுச்சேரியில் கடந்த 27ம் தேதி சர்வதேச சிலம்பம் மற்றும் கராத்தே போட்டி நடந்தது. ஒலிம்பிக் கேம் அண்ட் அசோசியேஷன் இந்தியா நிறுவனம் சார்பில் நடந்த போட்டியில், 1200 பேர் பங்கேற்றனர். போட்டியில், மூங்கில்துறைப்பட்டு வீரம் விளையாட்டு மேம்பாட்டு அறக்கட்டளை சார்பில் ஜான் வின்சென்ட் ராஜ் மற்றும் ஜோபின் ஆகியோர் பங்கேற்று முதலிடம் பிடித்தனர் இவர்களுக்கு சான்றிதழ், பதக்கம் வழங்கப்பட்டது.
