/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
துாய்மை சேவை குறித்த போட்டி மாணவிகளுக்கு பரிசு வழங்கல்
/
துாய்மை சேவை குறித்த போட்டி மாணவிகளுக்கு பரிசு வழங்கல்
துாய்மை சேவை குறித்த போட்டி மாணவிகளுக்கு பரிசு வழங்கல்
துாய்மை சேவை குறித்த போட்டி மாணவிகளுக்கு பரிசு வழங்கல்
ADDED : செப் 25, 2024 07:04 AM

சின்னசேலம் : சின்னசேலம் அரசு பெண்கள் பள்ளியில் நடந்த துாய்மை சேவை குறித்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
சின்னசேலம் பேரூராட்சி சார்பில், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துாய்மை சேவை குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கும் விழா நடந்தது.
பேரூராட்சி சேர்மன் லாவண்யா ஜெய்கணேஷ் தலைமை தாங்கி, கட்டுரை, ஓவியம், வினாடி வினா உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். தலைமையாசிரியர் ராஜலட்சுமி, துணை சேர்மன் ராகேஷ், உதவி தலைமையாசிரியர் ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ராஜா வரவேற்றார். இதில் துப்புரவு மேற்பார்வையாளர் சீனு, சுரேஷ் உட்பட ஆசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர்.