/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுவதில் சிக்கல்: தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிப்பு
/
கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுவதில் சிக்கல்: தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிப்பு
கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுவதில் சிக்கல்: தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிப்பு
கூட்டு குடிநீர் திட்டங்கள் செயல்படுவதில் சிக்கல்: தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் பாதிப்பு
ADDED : டிச 03, 2024 06:44 AM
திருக்கோவிலூர்: தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கூட்டு குடிநீர் திட்டங்கள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் சுந்தரேசபுரம் அருகே திறந்த வெளி கிணறு மற்றும் ஆழ்துளை கிணறுகள் வழியாக சின்னசேலம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஆற்றில் ஏற்பட்டிருக்கும் வெள்ளப்பெருக்கு காரணமாக கூட்டுக் குடிநீர் திட்ட பைப் லைன் மற்றும் மின் கேபிள்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறது.
இதனால் சின்ன சேலம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் 50க் கும் மேற்பட்ட கிராமங்களில் குடிநீர் வினியோகம் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் செஞ்சி கூட்டு குடிநீர் திட்டத்திற்காக ஏமப்பேர் ஆணைக்கரை பகுதியில் இருந்து ஆழ்துளை அமைக்கப்பட்டு, செஞ்சி உள்ளிட்ட ஏராளமான கிராமங்களுக்கு குடிநீர் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு இருக்கும் அணைக்கரை பகுதியில் உடைப்பு ஏற்பட்டிருப்பதால் செஞ்சி கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
இதேபோல் தென்பெண்ணை ஆற்றை ஒட்டி இருக்கும் வீரபாண்டி, வேட்டவலம் உள்ளிட்ட கூட்டு குடிநீர் திட்டங்களும் பாதிக்கப்பட்டுள்ளது.
தென்பெண்ணை ஆற்றின் கரையோர கிராமங்களுக்கு ஆற்றில் இருந்து தண்ணீர் எடுத்துச் செல்லப்பட்ட நிலையில் வெள்ளப்பெருக்கு காரணமாக பூமியில் புதைக்கப்பட்ட பைப் லைன் மற்றும் மின் ஒயர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது.
மீண்டும் இதனை சீரமைத்து குடிநீர் விநியோகத்தை ஏற்படுத்துவதில் காலதாமதம் ஏற்படும் என தெரிகிறது.