/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் பேராசிரியர்கள் கைகலப்பு
/
பாலிடெக்னிக் கல்லுாரியில் பேராசிரியர்கள் கைகலப்பு
ADDED : மார் 19, 2025 04:53 AM
திருக்கோவிலூர் : அரகண்டநல்லூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் பேராசிரியர்கள் இருவர் தாக்கிக் கொண்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அரகண்டநல்லூரில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில், ராம்சுந்தர்,34; ஐயப்பன், 38; ஆகிய இருவரும் விரிவுரையாளராக பணியாற்றுகின்றனர். இருவருக்கும் இடையே முன்விரோதம் உள்ளதாக தெரிகிறது.
கல்லுாரியில் நேற்று மதியம் உணவு இடைவேளையின் போது தண்ணீர் எடுக்க சென்ற ஐயப்பனுக்கும், ராம்சுந்தருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. வார்த்தை முற்றிய நிலையில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்.
இதில் ராம்சுந்தருக்கு காயம் ஏற்பட்டது. திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, சம்பவம் குறித்து அரகண்டநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ஐயப்பன் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.