/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட பணி: கலெக்டர் கள ஆய்வு
/
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட பணி: கலெக்டர் கள ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட பணி: கலெக்டர் கள ஆய்வு
'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' திட்ட பணி: கலெக்டர் கள ஆய்வு
ADDED : செப் 18, 2024 09:57 PM

கள்ளக்குறிச்சி: தியாகதுருகம் பகுதியில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' சிறப்பு திட்ட பணிகளை கலெக்டர் பிரசாந்த் கள ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி வட்டத்தில், தியாகதுருகம் பெரியமாம்பட்டு வி.ஏ.ஓ., அலுவலகத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் கிராமக் கணக்குகள் தனித்தனியாக பார்வையிட்டு ஆய்வு செய்து, மக்களுக்கு வழங்கப்படும் சேவைகளைத் துரிதமாக வழங்கிட சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, தியாகதுருகம் கால்நடை மருத்துவமனை, தியாகதுருகம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகம், பேரூராட்சியில் கட்டப்படும் சுற்றுச்சுவர் பணி, சமுதாய கழிவறை பணி, பெரியமாம்பட்டு ஜெயந்தி காலனியில் வீட்டின் கட்டுமானப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தொடர்ந்து, தியாகதுருகத்தில் புதிய நூலகக் கட்டடம், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் கழிவறை, சுகாதார வளாகம், வேளாண்மை விரிவாக்க மையத்தில் வேளாண் பணிகள் குறித்து ஆய்வு செய்த கலெக்டர் அரசின் வேளாண் நலத்திட்டங்கள் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடையும் வகையில் வேளாண் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டுமென அறிவுறுத்தினார்.
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட' கள ஆய்வு செய்த மாவட்ட நிலை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.
ஆய்வின்போது, அலுவலர்களிடம் பொதுமக்கள் தெரிவித்த கருத்துக்கள், கோரிக்கைகள், தேவையானத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் குறித்து விரிவாக கேட்டறிந்து ஆய்வு செய்யப் பட்டது.
இதில் டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், மகளிர் திட்ட இயக்குநர் சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.