/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊக்குவிப்பு கருத்தரங்கம்
/
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊக்குவிப்பு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊக்குவிப்பு கருத்தரங்கம்
ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊக்குவிப்பு கருத்தரங்கம்
ADDED : செப் 16, 2025 11:45 PM

கள்ளக்குறிச்சி; ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் ஊக்குவிப்பு கருத்தரங்கமும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்தநாள் விழா நடந்தது.
கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்., கல்லுாரியில் நடந்த நிகழ்ச்சிக்கு கல்வி நிறுவனங்களில் தலைவர் மகுடமுடி தலைமை தாங்கினார். செயலாளர் கோவிந்தராஜூ முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல்வர் மோகனசுந்தர் வரவேற்றார்.
கல்வியியல் கல்லுாரி முதல்வர் ஜெயசீலன், பள்ளி முதல்வர் தனலட்சுமி, ஏ.என்.எம்., கல்லுாரி முதல்வர் சரண்யாதேவி, டீன் அசோக் வாழ்த்துரை வழங்கினர். தமிழ்த்துறை தலைவி பிரவீனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தி பேசினர்.
கடலுார் ஓய்வு பெற்ற முதுகலை தமிழாசிரியர் சீனு செந்தாமரை சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, தலைகுனிந்து படித்து தலை நிமிர்ந்து நில் என்ற தலைப்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தி பேசினார். மேலும், முன்னாள் முதல்வர் அண்ணாதுரையின் ஆற்றல் குறித்தும், ஆசிரியர்களின் தனி சிறப்பு குறித்தும் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சியில் கல்லுாரி பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
துணை முதல்வர் ஜான்விக்டர் நன்றி கூறினார்.