ADDED : செப் 20, 2024 09:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளக்குறிச்சி : சின்னசேலம் அருகே சொத்து தகராறில் சகோதரர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் 6 பேர் மீது வழக்கு பதிந்து 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
சின்னசேலம் அடுத்த வினைதீர்த்தாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கனகசபை, 53; இவரது அண்ணன் செல்வராஜ், 62; இவர்களுக்கிடையே பூர்வீக சொத்து பாகப் பிரிவினை தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது.
கடந்த 16ம் தேதி இரு குடும்பத்தினர் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இரு தரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில், செல்வராஜ், குழந்தைவேல் மனைவி ரூபா, 46; மற்றும் 16 வயது சிறுவன், கனகசபை, அவரது மனைவி அபிராமி, செந்தில் மனைவி சசிகலா, 30; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து செல்வராஜ், ரூபா, சசிகலா ஆகிய 3 பேரை சின்னசேலம் போலீசார் கைது செய்தனர்.