/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
வீடுகளை அகற்ற எதிர்ப்பு; கடுவனுாரில் பொதுமக்கள் மறியல்
/
வீடுகளை அகற்ற எதிர்ப்பு; கடுவனுாரில் பொதுமக்கள் மறியல்
வீடுகளை அகற்ற எதிர்ப்பு; கடுவனுாரில் பொதுமக்கள் மறியல்
வீடுகளை அகற்ற எதிர்ப்பு; கடுவனுாரில் பொதுமக்கள் மறியல்
ADDED : ஜன 22, 2025 11:38 PM

மூங்கில்துறைப்பட்டு; கடுவனூரில் சாலை விரிவாக்க பணியின் போது சாலையோர வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மூங்கில்துறைப்பட்டு அடுத்த கடுவனூரில் சில மாதங்களாக இரு வழி சாலையை நான்கு வழி சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.இதில் சாலையோர வீடுகளை அகற்றும் பணி நடைபெற்றன.அப்பொழுது வீடுகளை ஒரு பகுதியில் இருந்து எடுக்காமல் அங்கு இங்குமாக எடுத்ததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதிகாரிகள் கண்டு கொள்ளாததால் திடீரென பொதுமக்கள் திருவண்ணாமலை கள்ளக்குறிச்சி சாலையில் நேற்று மாலை 4 மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரபு, வீரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபடுவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பின்பு திமுக மாவட்ட துணைச் செயலாளர் அண்ணாதுரை,ஒன்றிய செயலாளர் துரைமுருகன், ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை ஆகியோர் பொதுமக்களிடம் சமாதானம் பேசி கூட்டத்தை கலைத்தனர். இதனால் சாலை மறியல் மாலை 5 மணிக்கு விலக்கி கொள்ளப்பட்டது. சாலை மறியலால் அந்தப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.