ADDED : ஆக 24, 2026 07:13 PM
அ நிறம் | அளவு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி பால் நிறுத்த போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர்.
கள்ளக்குறிச்சி மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் நல சங்கத்தினர், ஒரு லிட்டர் பால் கொள்முதல் விலை 45 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும். அரசு ஊக்கத் தொகையை 6 ரூபாயாக உயர்த்த வேண்டும்.
சங்க நிர்வாக செலவுகளுக்கான விளிம்புத்தொகை 5 சதவீதமாக நிர்ணயம் செய்ய வேண்டும். தீவனங்களை 50 சதவீத மானிய விலையில் வழங்க வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒரு நாள் மட்டும் பால் நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
