/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
ரேஷன் கடை திறக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
/
ரேஷன் கடை திறக்காததை கண்டித்து பொதுமக்கள் மறியல்
ADDED : மார் 13, 2024 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சங்கராபுரம் : சங்கராபுரம் அருகே ரேஷன்கடை திறக்காததை கண்டித்து பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் அடுத்த அரசம்பட்டு கிராமத்தில் ரேஷன் கடை உள்ளது. இந்த கடையை முறையாக திறப்பதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
இந்நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று மதியம் 12:00 மணியளவில் சங்கராபுரம் - அரசம்பட்டு சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் போலீசார் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி, ரேஷன் கடையை திறக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, 1:00 மணியளவில் அனைவரும் கலைந்து சென்றனர்.

