/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
போலி ஆவணத்தால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டவர் போராட்டம்
/
போலி ஆவணத்தால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டவர் போராட்டம்
போலி ஆவணத்தால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டவர் போராட்டம்
போலி ஆவணத்தால் பத்திரப்பதிவு பாதிக்கப்பட்டவர் போராட்டம்
ADDED : ஜூன் 27, 2025 12:27 AM

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போலி ஆவணம் மூலம் பத்திரப்பதிவு செய்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி சார்பதிவாளர் அலுவலகம் முன்பு போராட்டம் நடந்தது.
சங்கராபுரம் அடுத்த மேலப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதம்பி; விவசாயி.
இவரது பெயரில் 20 சென்ட் நிலம் இருந்தது. அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அதே கிராமத்தை சேர்ந்த ஒருவர் பத்திரப்பதிவு செய்ததாக கூறி, சின்னதம்பி குடும்பத்தினர் சங்கராபுரம் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் பிரதாப்குமார், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதையடுத்து போராட்டம் கை விடப்பட்டது.