/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
/
அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 15, 2025 11:19 PM

கள்ளக்குறிச்சி: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகே மாவட்ட அரசு பள்ளியில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, கூட்டமைப்பு தலைவர் சங்கர் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ஹாரூன்ரஷீத், ராஜா, ஷேக்ஜானி முன்னிலை வகித்தனர்.
இளையராஜா வரவேற்றார். அரசு பள்ளிகளில் மாணவர்களை தரக்குறைவாக பேசுவதுடன், மாணவர்கள் மூலம் வகுப்புகள் நடத்தி, கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருந்து வரும் கள்ளக்குறிச்சி அரசு பள்ளி ஆசிரியர்கள் மீதும், இது குறித்து புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத சி.இ.ஓ., மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மூசா நன்றி கூறினார்.