/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
கிங்டம் படத்திற்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் ; நா.த.க.,வினர் கைது
/
கிங்டம் படத்திற்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் ; நா.த.க.,வினர் கைது
கிங்டம் படத்திற்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் ; நா.த.க.,வினர் கைது
கிங்டம் படத்திற்கு தடை கோரி ஆர்ப்பாட்டம் ; நா.த.க.,வினர் கைது
ADDED : ஆக 07, 2025 02:38 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் கிங்டம் படத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் செய்து, போஸ்டரை கிழித்த நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் 14 பேரை போலீசார் கைது செய்தனர்.
இயக்குநர் கவுதம் தின்னனுாரி இயக்கத்தில், விஜய் தேவரகொண்டா நடித்த கிங்டம் திரைப்படத்தில், ஈழத்தமிழர்களை கொச்சைப்படுத்தும் விதமாக இருப்பதாகவும், படத்தை தடை செய்ய வலியுறுத்தி கள்ளக்குறிச்சி சுந்தரவிநாயகர் கோவில் தெருவில் உள்ள தியேட்டர் வளாகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி மாநில ஒருங்கிணைப்பாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார்.
அப்போது, படத்தின் போஸ்டர்களை கிழித்து, தியேட்டர் மேலாளரிடம் மனு அளித்தனர். தகவலறிந்த கள்ளக்குறிச்சி போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்து, தனியார் மண்டபத்திற்கு அழைத்து சென்றார்.