ADDED : பிப் 18, 2026 04:18 AM
ரிஷிவந்தியம்: வாணாபுரத்தில் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் மற்றும் கிராம ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
சிவகாசி தாலுகா, ஈஞ்சார் பகுதியில் வி.ஏ.ஓ., யாகராஜன் மற்றும் கிராம உதவியாளர் முத்துப்பாண்டி ஆகியோரை அதே பகுதியை சேர்ந்த கூடலிங்கம், இவரது மகன் வெயிலிமுத்து ஆகிய இருவரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பணியில் இருந்த வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு, கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் முருகன் தலைமை தாங்கினார். வட்ட தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். வட்ட செயலாளர் மணிகண்டன் வரவேற்றார். இதில், கிராம உதவியாளர் சங்க வட்ட தலைவர் பாலசுப்ரமணியன், வட்ட செயலாளர் பத்மாவதி, பொருளாளர் யுவராஜ் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டனர். வட்ட பொருளாளர் கோவிந்தராஜுலு நன்றி கூறினார்.

