ADDED : ஜூன் 14, 2026 10:11 PM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கள்ளக்குறிச்சி கச்சேரி சாலை அம்பேத்கர் சிலை அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக தவ்ஹீத் ஜமாத் மாவட்ட தலைவர் சாலிக் பாஷா தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் அப்துல் கைய்யூம், மாவட்ட துணைத் தலைவர் ஆஸாத், மாவட்ட துணைச் செயலாளர் யாசர், முஹம்மது அலி, அமானுல்லா, ஷேக் ஹம்தான் முன்னிலை வகித்தனர். மாநில செயலாளர்கள் முஹம்மது யூசுப், அப்துல் சமது கண்டன உரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழகத்தில் தொடர்ந்து அரங்கேறி வரும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன்கொடுமைகள், அத்துமீறல்கள் மற்றும் கொடூரமான படுகொலைகளுக்கு கண்டனம் தெரிவித்ததுடன், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கோஷம் எழுப்பினர்.
