வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்
டைம்லைன்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
ப்ரீமியம்
தமிழகம்
இந்தியா
உலகம்
வர்த்தகம்
விளையாட்டு
கல்விமலர்
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
ஜோசியம்
காலண்டர்
ஆன்மிகம்
வாராவாரம்
இணைப்பு மலர்
போட்டோ
உலக தமிழர்
ஸ்பெஷல்
உள்ளூர் செய்திகள்
/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சாதித்த மாணவிகள் பெருமிதம் / சாதித்த மாணவிகள் பெருமிதம்
/
கள்ளக்குறிச்சி
சாதித்த மாணவிகள் பெருமிதம்
ADDED : நவ 06, 2025 05:46 AM
வினாடி - வினா போட்டி மிகவும் ஆர்வமாக இருந்தது. மாணவர்களின் சிந்தனை திறனை துாண்டும் வகையில் கேள்விகள் கேட்கப்பட்டன. இதனால், பதில் தெரிவிப்பதில் எங்களுக்குள் போட்டி நிலவியது. பட்டம் இதழில் ஏராளமான பொது அறிவு கேள்விகள் இடம் பெற்றுள்ளன. இதை முழுமையாக படித்தால் எதிர் காலத்தில் அரசு போட்டி தேர்வுகளை எதிர்கொள்வதற்கும் உதவியாக இருக்கும். விக் ஷயா, பிளஸ் 2 .
வினாடி வினா போட்டியில் கேட்கப்பட்ட கேள்விகள் மிகவும் கடினமாக இருந்தன. இதனால் மனதில் பதற்றம் நிலவியது. ஆனாலும் கேள்வியின் போது சிறிது நேரம் யோசித்து சரியான பதிலை தெரிவித்ததால் வெற்றி பெற முடிந்தது. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல, 'பட்டம்' இதழை உள்வாங்கி படித்து, அடுத்த கட்டமாக புதுச்சேரியில் நடைபெறும் மெகா வினாடி வினா போட்டியிலும் வெற்றி பெறுவேன். தேவதர்ஷிணி, பிளஸ் 1.
தினமலர் பட்டம் இதழ் நடத்திய வினாடி வினா போட்டி, எனக்கு புதிய அனுபவத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்களது அறிவுத்திறன் எந்த அளவிற்கு உள்ளது என்பதை நாங்களே தெரிந்து கொள்ள நடந்த போட்டியாக கருதுகிறேன். போட்டியில் கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளும் பசுமரத்தாணி போல மனதில் நன்றாக பதிந்துள்ளது. அறிவை வளர்க்க, நடப்பு நிகழ்வுகள் மற்றும் பொது அறிவை தெரிந்து கொள்ள இந்த போட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. ஹரிணி, பிளஸ் 1.
சக மாணவர்களுடன் வகுப்பறையில் நடைபெறும் போட்டி போல இல்லாமல், பல்வேறு வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் முன்னிலையில் வினாடி - வினா போட்டி நடந்தது. போட்டியில், வெற்றி பெற்று கலெக்டர், சி.இ.ஓ., மூலம் சான்றிதழ் பெற்றது மகிழ்ச்சியாக உள்ளது. கல்வியில் சாதனை படைத்தவர்கள் எங்களை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி பேசியது மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இந்த வாய்ப்பினை ஏற்படுத்தி தந்த தினமலர் நாளிதழுக்கு நன்றி. சிவசக்தி, பிளஸ் 1.