/
உள்ளூர் செய்திகள்
/
கள்ளக்குறிச்சி
/
மாணவர்களுக்கு தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
/
மாணவர்களுக்கு தி.மு.க., நலத்திட்ட உதவி வழங்கல்
ADDED : மார் 04, 2024 12:18 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
ஜி.அரியூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைச் சேர்மன் தனம் சக்திவேல், அவைத் தலைவர் கண்ணன், ஒன்றிய துணைச் செயலாளர் தணிகாசலம் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகம் உள்ளிட்ட நலத் திட்ட உதவி மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கப்பட்டது.
ஒன்றிய பொருளாளர் காமராஜ், மாவட்ட பிரதிநிதிகள் ஆறுமுகம், பிரகாஷ், ஜெயபால், நிர்வாகிகள் முருகன், சுப்ரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.

